Thursday, July 28, 2011

நம் தெருவாசிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
நாம படிக்கும்போதும் அதன் பிறகு வெட்டியா ஊர் சுத்தும்போதும் நிறைய நேரமும், சக்தியும் இருக்கும் அதை வைத்து நம் தெரு/சமுதாய முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யனும் என்று தோன்றும், ஆனால் அதற்கான மூலதனமான பணம் இருக்காது.

அதே காசு தேடி சொந்த தொழில் பார்க்கவோ, வெளிநாட்டிற்கோ சென்றவுடன் அந்த காசுப்பார்க்க படும் கஷ்டமும், உடல் சோர்வும், தன்னை நம்பி இருக்கும் தன் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றமும் நம் கண்முன்னே வந்து பொது நலன் ஒரு மூலையில்(Corner) எங்கோ ஒரு புள்ளியாகவே இருக்கும்.

கடின உழைப்புகளுக்கு நடுவே சிறு ஓய்வு வேண்டி ஊருக்குப்போகும்போது மனதும், உடலும் ஓய்வில் இருக்கும் அப்போ மீண்டும் தெரு/சமுதாய முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யனும் என்று தோன்றும், அந்த குறுகி நாட்களிலும் இதற்கான ஒரு வியூகம் அமைத்து அதை செயல் படுத்த முயற்சிப்போம்.

விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குப்போனவுடன் எல்லாமே மற (த்)ந்துப்போய் அவரவர் தன் காரியமே/கடமையே பெரிசு என்று எதை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் வாழ்வில் வேகத்தினூடே கலந்துவிடுவோம்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தேடி, சம்பாத்திது, எல்லாவற்றையும் செட்டில் செய்துவிட்டு அதை ஒரு சிறுதேனும் ஓய்வு தேடி வீட்டில் அப்பாடானு உக்காரும்போது மீண்டும் மனது நம் தெரு/சமுதாய முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யனும் என்று துடிக்கும், அப்போ மனசும், உடலும் ஒத்துழைக்க மறுக்கும்.......

ஆகவே சகோதரார்களே, நாம் அனைவரும் அல்லாஹ்வின் கிருபையால் வாழ்வின் அடிப்படை தேவைக்கு பொருளாதாரம் ஈட்டிக்கொண்டிருக்கும் இந்த வேலையில், சம்பாத்தியத்திலும் தம் உழைப்பிலும் ஒரளவேணும் நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செலவு செய்ய முன்வரவேண்டும், தன் தீவிர உழைப்புக்கு இடையே தன்னை சார்ந்த தான் பிறந்து வளர்ந்த நம் தெரு முன்னேற்றமும் நம் கண்முன்னே அடிக்கடி வந்துப்போகவும் அதற்காக மெனக்கெட்டு உழைக்கும் சகோதர்ர்களுக்கு தன்னால் முடிந்தளவிற்கு உறுதுணையாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்து அந்த பரக்கத்தான வாழ்வை இம்மையில் பெற்று அதற்கான கூலியை மறுமையில் எதிர்ப்பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....

Tuesday, July 19, 2011

மரண அறிவிப்பு..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
நமது தெருவைச் சேர்ந்த தரவூடு என்று அனைவராலும் அறியப்படும் மர்ஹூம் முகம்மது இஸ்ஹாக் அவர்களின் மனைவியான ஜனாபா உம்மா சலிமா அவர்கள் இன்று (19-07-2011) அதிகாலை 4 மணியளவில் காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்), இவர் செய்யது மீரான் (செய்மீரான்), ராஜிக், ரஃபீக் ஆகியோரின் வாப்புச்சி ஆவார்கள். யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை பிரகாசமாக்குவாயாக (ஆமீன்), இவரை பிரிந்து வருந்தும்
குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....
--------------
இரும்பு கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் மரணம் வந்தே தீரும்
அது முந்தவோ பிந்தவோ செய்யாது
உலகத்தில் பல வித கொள்கைகளிலும் இருக்கும் அனைவரும் ஏற்று கொண்ட ஒரு விடயம் மரணம்
இறையச்சம் எனும் தக்வா அதிகரிக்க நாம் மரணத்தை நினைவு கொள்ள வேண்டும் - இன்ஷா அல்லாஹ்

Friday, July 15, 2011

மரண அறிவிப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மத் ஷரீப் அவர்களின் மனைவியும் M S அபூபக்கர் , M S ஹாஜா,M S முஹிதீன் அவர்களின் தாயாருமான ஜமீலா அம்மாள் அவர்கள் 15-07-11 அன்று காலமாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது..

அன்னாரின் மறுவுலக வாழ்க்கைக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .


ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.' (அல்குர்ஆன்: 3:185)

Saturday, July 9, 2011

08 / 07 / 2011 அன்று நடைபெற்ற நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்…


அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,வெள்ளி கிழமை (08/07/2011) மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது
நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்:

நமது தெரு ஏழை,எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது
என அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.