Wednesday, June 6, 2012

மாதாந்திர கூட்டம் அழைப்பிதழ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புள்ள அமீரகவாழ் நெசவுத்தெருவாசிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நெசவுத்தெரு பொதுநல அமைப்பின் (அமீரகம்) மாதாந்திரக்கூட்டம் (ஜூன், 2012) இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (08-06-2012) மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு ஷார்ஜாவில் உள்ள சகோ. ஹாரூன் அவர்கள் தங்கியிருக்கும் வில்லாவில் நடைபெற இருக்கிறது.
அதுசமயம், சில/பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்க இருப்பதால் நம் தெருவாசிகள் அனைவரும் தயவுசெய்து இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பு ஆலோசனைகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு நிர்வாகக்குழுவை தொடர்புகொள்ளவேண்டுகிறோம்

தாங்கள் வரவை அன்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்

அன்புடன்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
நெசவுத்தெரு பொதுநல அமைப்பு, அமீரகம்
மேலும் தொடர்புக்கு:
தலைவர்: 050-5785239
செயலாளர்கள்: 050-5861806, 055-2668093

Monday, May 21, 2012

சிறப்புடன் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புடையீர்,
அல்லாஹ்வின் பேரருளால் நம் தெரு மாஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் இன்று (21-05-2012) நெசவுத்தெரு பொதுநல அமைப்பும்(அமீரகம்) வாஸன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் நீரழிவு நோய் பரிசோதனையும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது, எல்லாப்புகழும் இறைவனுக்கே..

இதனால் நமது தெருவாசிகளும், அதிரை மக்களும் இன்னும் நம்மூரை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் சுமார் 350 க்கும் மேல் கலந்துக்கொண்டு பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாசன் கண் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், கண் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, மேலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த அனைத்து தெருவாசிகளுக்கும், திறம்பட சிறப்பாக நடத்திக்காட்டிய  அமீரக வாழ் நெசவுத்தெரு பொது நல அமைப்பினருக்கும்,  இணையத்தில் விளம்பரப்படுத்திய அனைத்து சகோதர வலைத்தளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அல்லாஹ் அனைவருக்கும் பரக்கத்தும் ரஹ்மத்தும் அருள்வானாகவும் (ஆமீன்)

என்றும் நலம் விரும்பும்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
நெசவுத்தெரு பொதுநல அமைப்பு (அமீரகம்)