Thursday, October 6, 2011

மாதாந்திர கூட்டம் அழைப்பிதழ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புள்ள அமீரகவாழ் நெசவுத்தெருவாசிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நெசவுத்தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திரக்கூட்டம் (அக்டோபர்,2011) இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (07-10-2011) மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு ஷார்ஜாவில் உள்ள சகோ. ஹாரூன் அவர்கள் தங்கியிருக்கும் வில்லாவில் நடைபெற இருக்கிறது.

அதுசமயம், சில/பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்க இருப்பதால் நம் தெருவாசிகள் அனைவரும் தயவுசெய்து இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பு ஆலோசனைகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு நிர்வாகக்குழுவை தொடர்புகொள்ளவேண்டுகிறோம்

தாங்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்

அன்புடன்,

தலைவர் மற்றும் நிர்வாகிகள்

நெசவுத்தெரு பொதுநல அமைப்பு, அமீரகம்

மேலும் தொடர்புக்கு:

தலைவர்: 050-5785239

செயலாளர்கள்: 050-5861806, 050-3949287

Sunday, September 25, 2011

அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி - அழைப்பிதழ்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புள்ள தெருவாசிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

அல்லாஹ்வின் உதவியால் நம் ஊரின் நலன் காக்கவும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி என்ற ஒன்றை நிறுவி அதன் முதல் துவக்கநாளாக நம் அதிரை மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூட முடிவாகியுள்ளது

நாள்: 30 – செப்டம்பர், வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

இடம்: அல் கிஸைஸ் (Al Qusais), கிரஸெண்ட் பள்ளி (Crescent School) அரங்கம் (Auditorium), கிஸைஸ் லுலு ஹைப்பர் மார்க்கெட் பின்புறம் (Stadium Station Stop – Metro Green Line)

நம் ஊரின் நலன் கருதியும், முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் மற்றும் ஒற்றுமையை பேணிக்காக்கவும் நம் தெருவாசிகள் அனைவரும் இந்த கூட்டத்திற்கு வருகைதந்து கலந்துக்கொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த கூட்டம் சிறப்புடன் நடக்கவும் வெற்றிப்பெறவும் வாழ்த்துகிறோம்.

தகவல் பகிர்வு: தலைவர் மற்றும் நிர்வாகிகள் (நெசவுத்தெரு பொதுநல அமைப்பு, அமீரகம்)

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள

தலைவர்: +971 50 5785239

செயலாளர்கள்: +971 50 3949287, +971 55 9914732

Email: weaverstreet.uae@gmail.com

Thursday, September 15, 2011

மாதாந்திர கூட்டம் அழைப்பிதழ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...



அன்புள்ள அமீரகவாழ் நெசவுத்தெருவாசிகளுக்கு,


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



நெசவுத்தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திரக்கூட்டம் (செப்டம்பர்,2011) இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (16-09-2011) மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு ஷார்ஜாவில் உள்ள சகோ. ஹாரூன் அவர்கள் தங்கியிருக்கும் வில்லாவில் நடைபெற இருக்கிறது.



அதுசமயம், சில/பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்க இருப்பதால் நம் தெருவாசிகள் அனைவரும் தயவுசெய்து இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பு ஆலோசனைகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் விபரங்களுக்கு நிர்வாகக்குழுவை தொடர்புகொள்ளவேண்டுகிறோம்


தாங்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்


அன்புடன்,


தலைவர் மற்றும் நிர்வாகிகள்


நெசவுத்தெரு பொதுநல அமைப்பு, அமீரகம்


மேலும் தொடர்புக்கு:


தலைவர்: 050-5785239


செயலாளர்கள்: 050-5861806, 050 - 3949287

Monday, August 15, 2011

நெசவுத்தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திரக்கூட்டம் (12-08-2011)

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

அமீரகத்திலுள்ள நெசவுத்தெரு பொதுநல அமைப்பின் மாதாதந்திரக்கூட்டம் அல்லாஹ்வின் உதவியால் கடந்த வெள்ளிக்கிழமை 12-08-2011 அன்று ஷார்ஜாவில் நடைபெற்றது, நெசவுத்தெருவாசிகள் பெரும்பாலானோர் கலந்துக்கொண்டனர். இஃப்தார் நிகழ்வுடன் ஆரம்பித்து மக்ரிப் தொழுகைக்குப்பிறது கலந்தாலோசித்து கீழ் கண்ட தீர்மான்ங்கள் நிறைவேற்றப்பட்டன.

1- நெசவுத்தெரு மா ஆதினு ஹஸனாதில் இஸ்லாமிய சங்கத்திலிருந்த வந்த கடித்த்தில் சங்கத்திலுள்ள சமையல் செய்யும் இட்த்தை காலி செய்து பின்பக்கம் அமைப்பது, அந்த இடத்தில் தற்காலிகமாக (முழு கட்டுமானப்பணி பின்னர் செய்வது) பள்ளிவாசல் அமைத்து தொழுகை நட்த்துவது, ஒழு செய்வதர்கு போர்செட் போடுவது சம்பந்தமாக வந்த கடிதம் பரிசீலிக்கப்பட்டு அதற்கு எல்லோரும் ஒரு மனதான சம்மதம் தெரிவிக்கப்பட்ட்து. தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் முடிவின் படி அதற்கான நடவடிக்கையில் இறங்க ஒத்துழைப்பு தருவதாகவும். பள்ளிவாசல் கட்டுமானப்பணி முழுமையாக தொடங்கும்போது தேவையான பொருளாதார உதவி பின்னர் செய்வது என்று தீர்மானிக்கப்பட்ட்து, இதற்கான பதில் கடிதமும் அனுப்பிவைக்கபடும்.

2- கடந்த மாதம் நம் தெருவில் ஆதரவற்ற மாணவ/மாணவியருக்கு கல்வி கற்க உதவியாக பள்ளிக்கட்டணம், சீறுடை, நோட்டு புத்தகம் ஆகியவை விணியோகித்தது சம்பந்தமாக கலந்தாலோசித்து, அதில் மீதி உள்ள பணத்தை கல்வி உதவித்தொகை என்ற தனித்த கணக்கு நடைமுறைப்படுத்தி கல்விக்காக மட்டுமே உதவிசெய்வது என்று தீர்மானிக்கப்பட்ட்து

3- நோன்பின் முக்கிய கடமையான ஃபித்ரா விணியோகத்திற்காக எல்லோரிடமும் ஒரு ஆளுக்கு (அமீரக அவ்காஃபின் கட்டளைப்படி) திர்ஹாம் 15 வசூல் செய்து தெருவில் இயங்கி வரும் நெசவுத்தெரு இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு விணியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

யா அல்லாஹ்... மேலும் பொதுநலத்தில் அதிகமதிகம் ஈடுபடுத்தி, நம் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட பொருளாதார வசதியையும், உடல் ஒத்துழைப்பையும் கொடுத்து எந்த ஒரு சிறு தவறுமின்றி நேர்மையாக நடக்க உதவி செய்வாயாக, ஆமீன்..

இப்படிக்கு,

தலைவர் மற்றும் நிர்வாகிகள்

நெசவுத்தெரு பொதுநல அமைப்பு - அமீரகம்

Thursday, July 28, 2011

நம் தெருவாசிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
நாம படிக்கும்போதும் அதன் பிறகு வெட்டியா ஊர் சுத்தும்போதும் நிறைய நேரமும், சக்தியும் இருக்கும் அதை வைத்து நம் தெரு/சமுதாய முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யனும் என்று தோன்றும், ஆனால் அதற்கான மூலதனமான பணம் இருக்காது.

அதே காசு தேடி சொந்த தொழில் பார்க்கவோ, வெளிநாட்டிற்கோ சென்றவுடன் அந்த காசுப்பார்க்க படும் கஷ்டமும், உடல் சோர்வும், தன்னை நம்பி இருக்கும் தன் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றமும் நம் கண்முன்னே வந்து பொது நலன் ஒரு மூலையில்(Corner) எங்கோ ஒரு புள்ளியாகவே இருக்கும்.

கடின உழைப்புகளுக்கு நடுவே சிறு ஓய்வு வேண்டி ஊருக்குப்போகும்போது மனதும், உடலும் ஓய்வில் இருக்கும் அப்போ மீண்டும் தெரு/சமுதாய முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யனும் என்று தோன்றும், அந்த குறுகி நாட்களிலும் இதற்கான ஒரு வியூகம் அமைத்து அதை செயல் படுத்த முயற்சிப்போம்.

விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குப்போனவுடன் எல்லாமே மற (த்)ந்துப்போய் அவரவர் தன் காரியமே/கடமையே பெரிசு என்று எதை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் வாழ்வில் வேகத்தினூடே கலந்துவிடுவோம்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தேடி, சம்பாத்திது, எல்லாவற்றையும் செட்டில் செய்துவிட்டு அதை ஒரு சிறுதேனும் ஓய்வு தேடி வீட்டில் அப்பாடானு உக்காரும்போது மீண்டும் மனது நம் தெரு/சமுதாய முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்யனும் என்று துடிக்கும், அப்போ மனசும், உடலும் ஒத்துழைக்க மறுக்கும்.......

ஆகவே சகோதரார்களே, நாம் அனைவரும் அல்லாஹ்வின் கிருபையால் வாழ்வின் அடிப்படை தேவைக்கு பொருளாதாரம் ஈட்டிக்கொண்டிருக்கும் இந்த வேலையில், சம்பாத்தியத்திலும் தம் உழைப்பிலும் ஒரளவேணும் நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செலவு செய்ய முன்வரவேண்டும், தன் தீவிர உழைப்புக்கு இடையே தன்னை சார்ந்த தான் பிறந்து வளர்ந்த நம் தெரு முன்னேற்றமும் நம் கண்முன்னே அடிக்கடி வந்துப்போகவும் அதற்காக மெனக்கெட்டு உழைக்கும் சகோதர்ர்களுக்கு தன்னால் முடிந்தளவிற்கு உறுதுணையாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்து அந்த பரக்கத்தான வாழ்வை இம்மையில் பெற்று அதற்கான கூலியை மறுமையில் எதிர்ப்பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....

Tuesday, July 19, 2011

மரண அறிவிப்பு..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
நமது தெருவைச் சேர்ந்த தரவூடு என்று அனைவராலும் அறியப்படும் மர்ஹூம் முகம்மது இஸ்ஹாக் அவர்களின் மனைவியான ஜனாபா உம்மா சலிமா அவர்கள் இன்று (19-07-2011) அதிகாலை 4 மணியளவில் காலமாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்), இவர் செய்யது மீரான் (செய்மீரான்), ராஜிக், ரஃபீக் ஆகியோரின் வாப்புச்சி ஆவார்கள். யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை பிரகாசமாக்குவாயாக (ஆமீன்), இவரை பிரிந்து வருந்தும்
குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....
--------------
இரும்பு கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் மரணம் வந்தே தீரும்
அது முந்தவோ பிந்தவோ செய்யாது
உலகத்தில் பல வித கொள்கைகளிலும் இருக்கும் அனைவரும் ஏற்று கொண்ட ஒரு விடயம் மரணம்
இறையச்சம் எனும் தக்வா அதிகரிக்க நாம் மரணத்தை நினைவு கொள்ள வேண்டும் - இன்ஷா அல்லாஹ்

Friday, July 15, 2011

மரண அறிவிப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மத் ஷரீப் அவர்களின் மனைவியும் M S அபூபக்கர் , M S ஹாஜா,M S முஹிதீன் அவர்களின் தாயாருமான ஜமீலா அம்மாள் அவர்கள் 15-07-11 அன்று காலமாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது..

அன்னாரின் மறுவுலக வாழ்க்கைக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .


ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.' (அல்குர்ஆன்: 3:185)

Saturday, July 9, 2011

08 / 07 / 2011 அன்று நடைபெற்ற நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்…


அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,வெள்ளி கிழமை (08/07/2011) மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது
நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்:

நமது தெரு ஏழை,எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது
என அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

Saturday, May 21, 2011

நெசவு தெரு பொதுநல அமைப்பு - யு.ஏ.இ

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
                      அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,நமது நெசவு தெரு பொதுநல அமைப்பு,சில காரணங்களால் சில வருடங்கள் இடைவெளி ஏற்பட்டது.அதனால் மீண்டும் நமது அமைப்பை இறைவன் உதவியால்  வெள்ளிக்கிழமை (20/05/2011) மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் இக்கூட்டம் நல்ல முறையில் நடைபெற்றது.கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.அப்பொழுது நமது நெசவு தெரு பொதுநல அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்..
தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளின் விபரம்,

தலைவர்       :     முகைதீன் (s/o நூர் முகம்மது )

பொருளாளர்    :     முகம்மது தாஹா (s/o நெய்னா முகம்மது )

செயலாளர்கள்
1.சாகுல் ஹமீது (s/o முகம்மது அபூபக்கர் )
2.ஹாரூன் ரஷீது (s/o செய்யது இப்றாகீம் )
3.சேக் அப்துல்லா (s/o ஜபருல்லா )
4.சாகுல் ஹமீது (s/o பஷீர் அஹமது )
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
மாத சந்தாவாக திர்ஹம் 10 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
நெசவு தெரு பொதுநல அமைப்பின் நோக்கம் நமது தெருவாசிகளுக்கு
நம்மால் இயன்ற அளவு உதவிகள் செய்வது.

வருங்கால திட்டங்கள்:
1.அவசர கால மருத்துவ உதவி
2.மார்க்க கல்வி உதவி
3.ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி
4.ஏழை குழந்தைகளுக்கு கத்னா செய்ய உதவி
இவை அனைத்தும் நமது அமைப்பின் நிதி நிலைமையை பொருத்து
உதவிகள் செய்யப்படும்..
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக அமைக்கப்பட்ட நமது நெசவு தெரு பொதுநல அமைப்புக்கு நாம் எல்லோருடைய ஆதரவும்,ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்









وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

இப்படிக்கு,
நெசவு தெரு பொதுநல அமைப்பு – யு.ஏ.இ

Wednesday, May 18, 2011

முக்கிய அறிவிப்பு..


அஸ்ஸலாமு அலைக்கும்,

               அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக் கிழமை ( 20 -05 - 2011 ) மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது தெரு பொதுநல அமைப்பின்  கூட்டம் நடை பெற உள்ளது. அன்று நடைபெறும் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப் பட உள்ளனர்.அது சமயம் நமது தெரு சகோதரர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களது கருத்துகளையும்,ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

நெசவு தெரு பொதுநல அமைப்பு - யு.ஏ.இ

Friday, May 6, 2011

ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

                   யு.ஏ.இ வாழ் நெசவு தெருவாசிகள் இன்று (06-05-2011)  ஷார்ஜா ஹாரூன் ரூமில் ஒன்று கூடி மீண்டும் நலப்பனிகளை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.இதன்படி நமது தெருவாசிகள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.  நாம் அழைப்பு  கொடுத்ததில் அதிகபட்சமாக
20 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நம் எல்லோருடைய நோக்கமும் நமது தெரு நலப்பணிக்காக இருப்பதால் தொடர்ந்து முன்பு இருந்ததை விட சிறப்பாக செய்ய முடிவு செய்யப்பட்டது.சில தவிற்க முடியாத சூழ்நிலையால் பலர் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.அதனால் இன்ஷா அல்லாஹ்  வரும் 13-5-2011  அன்று மீண்டும்  அனைவரும் ஒன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என்று ஒருமித்த கருத்து ஏற்பட்டது.அதனால்  06-05-2011 அன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வரும் 13-05-2011 அன்று நடைபெறும் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்  என்று  கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

                                      கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
                             



இப்படிக்கு,

நெசவு தெரு பொதுநல அமைப்பு  - யு.ஏ.இ

Thursday, April 28, 2011

நெசவு தெரு பொதுநல அமைப்பு - யு.ஏ.இ

                                               அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

                  யு.ஏ.இ ல் முன்பு இயங்கி வந்த நெசவு தெரு பொதுநல அமைப்பு சில காரணங்களால் எந்தவித செயல்பாடும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது நமது தெருவின் நலன் கருதி மீண்டும் அதை புது பொலிவுடன் துவங்கலாம் என்று நமது தெருவாசிகள் பலர் விருப்பம் தெரிவித்தனர்.அதனால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற
06-05-2011 அன்று ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது தெருவாசிகள் அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.ஆகையால் நமது தெருவை சேர்ந்த அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவரவர் ஆலோசனைகளை தெரிவிக்க கேட்டு கொள்கின்றோம்..


இப்படிக்கு...

நெசவு தெருவாசிகள்