Tuesday, March 6, 2012

அமீரக நெசவு தெரு பொதுநல அமைப்பின் புதிய நிர்வாகிகள்...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (அன்னிஸா 4:114)
அன்பிற்கினிய சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் எங்கள் அமீரக - நெசவுத் தெரு பொதுநல அமைப்பின் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் சகோதரர். A.M. ஜமால் அவர்கள் தலைமையில், சார்ஜாவில் உள்ள சகோதரர். அஷ்ரஃப் அவர்களின் ரூமில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அமீரக வாழ் நெசவுத் தெரு முஹல்லா சகோதரர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இப்பொதுக் குழுவில் தலைவர் அவர்கள் 2012-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய இருப்பதை உறுப்பினர்களிடம் தெரிவித்து, கடந்த வருடத்தின் செயல்படுகளின் அறிக்கையும், அமைப்பின் பொருளாதார கணக்கு வழக்குகள் குறித்த தகவல்களையும் அறிக்கையாக உறுப்பினர்களிடம் அளித்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் அளித்த செயல்பாடுகளின் தகவல்களில் முழு திருப்தி கொண்டு மகிழ்ச்சிகளை பரிமாரிக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த ஒன்றுகூடலின் இறுதி நிகழ்வாக பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு, கீழ்காணும் சகோதரர்கள் ஒருமணதாக தேர்வு செய்யப்பட்டார்கள். விபரம் பின் வருமாறு:

தலைவர் : சகோதரர். N. முகைதீன் 050-5785239

செயலாளர் : சகோதரர். M.A. சாகுல் ஹமீது 050-5861806

உ.செயலாளர் : சகோதரர். J. ஷேக் அப்துல்லாஹ் 055-2668093

பொருளாளர் : சகோதரர் . N. முஹம்மது தாஹா 050-6747993

மக்கள் தொடர்பு
செயலாளர்கள் :
சகோதரர். S. ஹாரூன் ரஷீத் 050-8886502
சகோதரர். H. சர்புதீன் 055-8224700

செயற்குழு உறுப்பினர்கள்:

சகோதரர். A.S. ஹமீது 050-7574106
சகோதரர். A. அப்துல் மாலிக் 050-6453464
சகோதரர். A.M. ஜமால் 055-9722872
சகோதரர். ஷேக் ஹபீப் ரஹ்மான் 055-8816785
சகோதரர். M.அபுபக்கர் 050-9287635

வல்ல நாயன் அல்லாஹ்வின் உதவியால் இக்கூட்டத்தை உறுப்பினர்கள் கஃப்பாரா துஆ ஓதி இனியமுறையில் சந்தோஷத்துடன் கலைந்து சென்றனர்.
நிச்சயமாக இறை விசுவாசிகள் அனைவரும் சகோதரர்கள். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்ஹுஜ்ராத் 49:10)

நிர்வாகம்
நெசவுத் தெரு பொதுநல அமைப்பு
அமீரகம்

நெசவு தெரு பொதுநல அமைப்பின் 10 மாத கால சாதனைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல் ஹஜ் 22:77)

அன்பிற்கினிய அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பின் உறுப்பினர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் கடந்த 10 மாதங்களில் நமது அமைப்பின் சார்பாக செய்த பணிகளின் விபரங்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

1. நமது பொதுநல அமைப்பின் சார்பாக தாயகத்தில் உள்ள நமது தெரு சங்கத்தில் குழந்தைகளுக்கு மார்க்க கல்வி வகுப்புகள் நடத்தி வருவது நாம் அறிவோம். மார்க்க கல்வி பயிழ வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக ஒரு ஒஸ்தாத் நியமித்து அவர்களுடைய சம்பளத்திற்கும் ஏற்பாடு செய்ய நமது தெரு சங்க நிர்வாகிகள் கோரி இருந்தார்கள். அதனை பரிசீலித்து மேலும் ஒரு ஒஸ்தாத் நியமிக்கவும், அவர்களுக்கான சம்பளத்தை அமீரக பொதுநல அமைப்பு சார்பாக வழங்குவது என தீர்மானித்து வழங்கி வருகிறோம்.

2. கடந்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நமது நெசவுத் தெருவில் உள்ள 40 எழை-எளிய மாணவ - மாணவியற்கு பள்ளிச் சீறுடை, நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் படிப்பு கட்டணம் ஆகிய கல்வி உதவிகள் நமது அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பு சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

3. சமீபத்தில் அமீரகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் நமது நெசவுத் தெரு சார்பாக நமது பொதுநல அமைப்பும் பங்கேற்று ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றோம்.

4. நமதூர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அச்சிடப்பட்டுள்ள நாள் காட்டி(உயடநனெயச)-யை நமது தெருவில் 30 மேற்பட்டவர்களுக்கு வினியோகம் செய்துள்ளோம்.

5. நமது தெருவை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவருக்கு, அவசர மருத்துவ உதவி வேண்டி அவருடைய கணவனால் நமது அமைப்பின் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள், உடனடியாக அவர்களுக்கு போர்கால அடிப்படையில் மருத்துவ உதவியை நமது பொதுநல அமைப்பின் சார்பாக வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்! மேற்காணும் அனைத்து செயல்பாடுகளும் அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பின் அங்கத்தினர்களாகிய தாங்கள் அனைவரும் அளித்து வருகிற ஆலோசனைகள், ஒத்துழைப்புகள், பங்களிப்புகள், உதவிகள் ஆகியவைகளால் தான் சாத்தியமானது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம். இனி வரும் காலங்களிலும் கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாக செயல்பட்டு பல நல்ல காரியங்கள் இன்ஷாஅல்லாஹ் செய்ய ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்: அறிந்தவன். (அல்பகரா 2:261)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் வழிபாடுகளையும், நல்லறங்களையும் ஏற்று, நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றமளிப்பானாக! ஆமீன்.

அன்புடன்,
அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பு