Monday, May 21, 2012

சிறப்புடன் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புடையீர்,
அல்லாஹ்வின் பேரருளால் நம் தெரு மாஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் இன்று (21-05-2012) நெசவுத்தெரு பொதுநல அமைப்பும்(அமீரகம்) வாஸன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் நீரழிவு நோய் பரிசோதனையும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது, எல்லாப்புகழும் இறைவனுக்கே..

இதனால் நமது தெருவாசிகளும், அதிரை மக்களும் இன்னும் நம்மூரை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் சுமார் 350 க்கும் மேல் கலந்துக்கொண்டு பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாசன் கண் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், கண் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, மேலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த அனைத்து தெருவாசிகளுக்கும், திறம்பட சிறப்பாக நடத்திக்காட்டிய  அமீரக வாழ் நெசவுத்தெரு பொது நல அமைப்பினருக்கும்,  இணையத்தில் விளம்பரப்படுத்திய அனைத்து சகோதர வலைத்தளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அல்லாஹ் அனைவருக்கும் பரக்கத்தும் ரஹ்மத்தும் அருள்வானாகவும் (ஆமீன்)

என்றும் நலம் விரும்பும்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
நெசவுத்தெரு பொதுநல அமைப்பு (அமீரகம்)

Friday, May 18, 2012

இலவச கண் சிகிச்சை முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அன்புள்ள நம் தெரு சகோதர/சகோதரிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நெசவுத்தெரு பொதுநல அமைப்பு, அமீரகம் (UAE)
மற்றும் வாசன் கண் மருத்துவமனை

இணைந்து நடத்தும்

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்.

நமது ஊர் மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் நமது தெரு மா ஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் எதிர்வரும் திங்கள் கிழமை 21-05-2012 காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணிவரை அல்லாஹ்வின் உதவியால், புகழ் பெற்ற வாசன் கண் மருத்துவமனையின் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்க உள்ளார்கள். தாங்கள் உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அறிவித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.