Monday, August 15, 2011

நெசவுத்தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திரக்கூட்டம் (12-08-2011)

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

அமீரகத்திலுள்ள நெசவுத்தெரு பொதுநல அமைப்பின் மாதாதந்திரக்கூட்டம் அல்லாஹ்வின் உதவியால் கடந்த வெள்ளிக்கிழமை 12-08-2011 அன்று ஷார்ஜாவில் நடைபெற்றது, நெசவுத்தெருவாசிகள் பெரும்பாலானோர் கலந்துக்கொண்டனர். இஃப்தார் நிகழ்வுடன் ஆரம்பித்து மக்ரிப் தொழுகைக்குப்பிறது கலந்தாலோசித்து கீழ் கண்ட தீர்மான்ங்கள் நிறைவேற்றப்பட்டன.

1- நெசவுத்தெரு மா ஆதினு ஹஸனாதில் இஸ்லாமிய சங்கத்திலிருந்த வந்த கடித்த்தில் சங்கத்திலுள்ள சமையல் செய்யும் இட்த்தை காலி செய்து பின்பக்கம் அமைப்பது, அந்த இடத்தில் தற்காலிகமாக (முழு கட்டுமானப்பணி பின்னர் செய்வது) பள்ளிவாசல் அமைத்து தொழுகை நட்த்துவது, ஒழு செய்வதர்கு போர்செட் போடுவது சம்பந்தமாக வந்த கடிதம் பரிசீலிக்கப்பட்டு அதற்கு எல்லோரும் ஒரு மனதான சம்மதம் தெரிவிக்கப்பட்ட்து. தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் முடிவின் படி அதற்கான நடவடிக்கையில் இறங்க ஒத்துழைப்பு தருவதாகவும். பள்ளிவாசல் கட்டுமானப்பணி முழுமையாக தொடங்கும்போது தேவையான பொருளாதார உதவி பின்னர் செய்வது என்று தீர்மானிக்கப்பட்ட்து, இதற்கான பதில் கடிதமும் அனுப்பிவைக்கபடும்.

2- கடந்த மாதம் நம் தெருவில் ஆதரவற்ற மாணவ/மாணவியருக்கு கல்வி கற்க உதவியாக பள்ளிக்கட்டணம், சீறுடை, நோட்டு புத்தகம் ஆகியவை விணியோகித்தது சம்பந்தமாக கலந்தாலோசித்து, அதில் மீதி உள்ள பணத்தை கல்வி உதவித்தொகை என்ற தனித்த கணக்கு நடைமுறைப்படுத்தி கல்விக்காக மட்டுமே உதவிசெய்வது என்று தீர்மானிக்கப்பட்ட்து

3- நோன்பின் முக்கிய கடமையான ஃபித்ரா விணியோகத்திற்காக எல்லோரிடமும் ஒரு ஆளுக்கு (அமீரக அவ்காஃபின் கட்டளைப்படி) திர்ஹாம் 15 வசூல் செய்து தெருவில் இயங்கி வரும் நெசவுத்தெரு இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு விணியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

யா அல்லாஹ்... மேலும் பொதுநலத்தில் அதிகமதிகம் ஈடுபடுத்தி, நம் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட பொருளாதார வசதியையும், உடல் ஒத்துழைப்பையும் கொடுத்து எந்த ஒரு சிறு தவறுமின்றி நேர்மையாக நடக்க உதவி செய்வாயாக, ஆமீன்..

இப்படிக்கு,

தலைவர் மற்றும் நிர்வாகிகள்

நெசவுத்தெரு பொதுநல அமைப்பு - அமீரகம்