அஸ்ஸலாமு அலைக்கும்,
யு.ஏ.இ வாழ் நெசவு தெருவாசிகள் இன்று (06-05-2011) ஷார்ஜா ஹாரூன் ரூமில் ஒன்று கூடி மீண்டும் நலப்பனிகளை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.இதன்படி நமது தெருவாசிகள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. நாம் அழைப்பு கொடுத்ததில் அதிகபட்சமாக
20 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நம் எல்லோருடைய நோக்கமும் நமது தெரு நலப்பணிக்காக இருப்பதால் தொடர்ந்து முன்பு இருந்ததை விட சிறப்பாக செய்ய முடிவு செய்யப்பட்டது.சில தவிற்க முடியாத சூழ்நிலையால் பலர் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.அதனால் இன்ஷா அல்லாஹ் வரும் 13-5-2011 அன்று மீண்டும் அனைவரும் ஒன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என்று ஒருமித்த கருத்து ஏற்பட்டது.அதனால் 06-05-2011 அன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வரும் 13-05-2011 அன்று நடைபெறும் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இப்படிக்கு,
நெசவு தெரு பொதுநல அமைப்பு - யு.ஏ.இ
1 comment:
நல்லவை நடந்தால் நண்மையே :)
Post a Comment