Tuesday, March 6, 2012

நெசவு தெரு பொதுநல அமைப்பின் 10 மாத கால சாதனைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல் ஹஜ் 22:77)

அன்பிற்கினிய அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பின் உறுப்பினர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் கடந்த 10 மாதங்களில் நமது அமைப்பின் சார்பாக செய்த பணிகளின் விபரங்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

1. நமது பொதுநல அமைப்பின் சார்பாக தாயகத்தில் உள்ள நமது தெரு சங்கத்தில் குழந்தைகளுக்கு மார்க்க கல்வி வகுப்புகள் நடத்தி வருவது நாம் அறிவோம். மார்க்க கல்வி பயிழ வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக ஒரு ஒஸ்தாத் நியமித்து அவர்களுடைய சம்பளத்திற்கும் ஏற்பாடு செய்ய நமது தெரு சங்க நிர்வாகிகள் கோரி இருந்தார்கள். அதனை பரிசீலித்து மேலும் ஒரு ஒஸ்தாத் நியமிக்கவும், அவர்களுக்கான சம்பளத்தை அமீரக பொதுநல அமைப்பு சார்பாக வழங்குவது என தீர்மானித்து வழங்கி வருகிறோம்.

2. கடந்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நமது நெசவுத் தெருவில் உள்ள 40 எழை-எளிய மாணவ - மாணவியற்கு பள்ளிச் சீறுடை, நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் படிப்பு கட்டணம் ஆகிய கல்வி உதவிகள் நமது அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பு சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

3. சமீபத்தில் அமீரகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் நமது நெசவுத் தெரு சார்பாக நமது பொதுநல அமைப்பும் பங்கேற்று ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றோம்.

4. நமதூர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அச்சிடப்பட்டுள்ள நாள் காட்டி(உயடநனெயச)-யை நமது தெருவில் 30 மேற்பட்டவர்களுக்கு வினியோகம் செய்துள்ளோம்.

5. நமது தெருவை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவருக்கு, அவசர மருத்துவ உதவி வேண்டி அவருடைய கணவனால் நமது அமைப்பின் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள், உடனடியாக அவர்களுக்கு போர்கால அடிப்படையில் மருத்துவ உதவியை நமது பொதுநல அமைப்பின் சார்பாக வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்! மேற்காணும் அனைத்து செயல்பாடுகளும் அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பின் அங்கத்தினர்களாகிய தாங்கள் அனைவரும் அளித்து வருகிற ஆலோசனைகள், ஒத்துழைப்புகள், பங்களிப்புகள், உதவிகள் ஆகியவைகளால் தான் சாத்தியமானது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம். இனி வரும் காலங்களிலும் கடந்த காலங்களைவிட இன்னும் சிறப்பாக செயல்பட்டு பல நல்ல காரியங்கள் இன்ஷாஅல்லாஹ் செய்ய ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்: அறிந்தவன். (அல்பகரா 2:261)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் வழிபாடுகளையும், நல்லறங்களையும் ஏற்று, நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றமளிப்பானாக! ஆமீன்.

அன்புடன்,
அமீரக நெசவுத் தெரு பொதுநல அமைப்பு

No comments: